Pookal Trust Logo

பூக்கள் அறக்கட்டளை - பசுமை மரங்கள் சுற்றுச்சூழல் மேம்பாடு

எதிர்கால இயற்கையின் குரலாக உங்களிடம் உரையாட விரும்புகிறேன்.

எங்கள் வரலாறு

பூக்கள் அறக்கட்டளை திரு.சிவகுமார் மற்றும் 11 உறுப்பினர்களால் 03/03/2017 அன்று காங்கேயத்தில் நிறுவப்பட்டது. பதிவு எண் 6/BK4/2017.

இயற்கை என்றால் என்ன?

நம் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமக்கு விட்டுச் சென்ற பொன் விளையும் மண், மாசற்ற காற்று, மாசற்ற நீர். அதை நாம் இன்று என்ன செய்துள்ளோம்? அனைத்தையும் விஷமாக்கி அடுத்த தலைமுறைக்கு தர தயாராக உள்ளோம். இதை அனைத்தையும் மாற்றி அடுத்த தலைமுறைக்கு தராவிட்டால் வரலாற்றில் மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கை வளங்களை அழித்து ஒரு இருண்ட காலத்தை உருவாக்கிய பெருமை நம் அனைவரையும் சேரும். இதை செய்யவா பிறந்துள்ளோம், இல்லை இதை மாற்றவே பிறந்துள்ளோம்.

எங்கள் நோக்கம்

விதை வளர மண்! மண் வளத்தை பாதுகாக்கின்றோமா? இயற்கை உரத்தை விதைத்து மண்ணை வளர்த்தோம். பிளாஸ்டிக்கை புதைத்து மண்வளத்தை கெடுத்தோம். இதை எப்படி மீட்கப்போகிறோம்? இதை மாற்ற அமைக்கப்பட்டது தான் பூக்கள் அமைப்பு. எங்கள் நோக்கங்கள்: (1) விதைகளை சேகரித்தல் (2) விதைகளை பராமரித்தல் (3) விதைகளை நடவு செய்து வளர்த்தல் (4) மரம் நடுதல் (5) மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் (6) குளம், குட்டை பராமரித்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் கொடுத்தல்.

எங்கள் குழு

திரு. சிவகுமார்

நிறுவனர்

திரு. திருக்குமரராஜா

அறங்காவலர்